வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி


வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 21 July 2021 5:48 PM GMT (Updated: 21 July 2021 5:48 PM GMT)

ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிதது வருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிதது வருகின்றனர்.
கேமரா
 பரமக்குடி பூவளந்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தான பாரதி (வயது25). தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் சொந்தமாக கேமரா வாங்க வேண்டும் என்று விரும்பி உள்ளார். இதுதொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார். 
இந்த சமயத்தில் அவருக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த குறுஞ்செய்தியில் அமெரிக்காவின் டெலிபோன், டெலிகிராப் நிறுவனத்தின் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கேமராவை ரூ.10 ஆயிரத்திற்கு சலுகை விலையில் தருவதாக தெரிவித்துள்ளனர். இதன்படி ஆன்லைன் மூலம் வாலிபர் ரூ.10 ஆயிரம் செலுத்தியபோது சலுகையில் பெற்ற வாடிக்கையாளர் என்ற முறையில் ஐபோன், சாம்சங் செல்போன், மோட்டார் சைக்கிள், ஐபேட், பிளே ஸ்டேசன் என பல விலை உயர்ந்த பொருட்கள் பம்பர் பரிசாக விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
கட்டணம்
இதனால் மகிழ்ச்சியில் இருந்த சந்தான பாரதியிடம் இந்த பொருட்களை வாங்குவதற்கு செயல்முறை கட்டணமாக மேலும், ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து பல்வேறு காரணங்களை கூறி வாலிபரிடம் பணம் கேட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து அனுப்புவதற்கு வரி, அனுப்பும் கட்டணம், சரக்கு வரி, வெளிநாட்டு பொருட்களை அனுப்புவதற்கான சான்றிதழ் கட்டணம் என அடுத்தடுத்த காரணங்களை கூறி பணம் பெற்று வந்துள்ளனர்.
வாலிபரும் விட்ட பணத்தினை கிடைக்கும் பொருட்களை வைத்து மீட்டுக்கொள்ளலாம் என்று இதுதான் கடைசி இதுதான் கடைசி என்று கூறியதை கேட்டு எப்படியாவது அனைத்து பரிசுகளையும் பெற்றுவிட வேண்டும் என்று பணம் அனுப்பி உள்ளார். இவ்வாறு ரூ.21 லட்சத்து 83 ஆயிரம் பணத்தினை பெற்றுக்கொண்ட கும்பல் மீண்டும் பணம் கேட்டு நச்சரித்துள்ளது. 
புகார்
இதனால் ஒரு கட்டத்தில் வாலிபர் மேற்கண்டவர்கள் தன்னிடம் பணம் பறிக்கும் கும்பல் என்பதை உணர்ந்து தந்தை வந்து வீடுகட்ட அனுப்பிய பணம் எங்கு கேட்டால் என்ன செய்வது என்று தவித்துள்ளார். இதனால் இந்த மோசடி குறித்து வாலிபர் சந்தான பாரதி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபாண்டி சேதுராயர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வாலிபரிடம் தொடர்பு கொண்ட எண், வங்கி கணக்கு, ஆன்லைன் பண பரிவர்த்தனை விவரம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

Next Story