லாரி மோதி மின்கம்பம் சேதம்


லாரி மோதி மின்கம்பம் சேதம்
x
தினத்தந்தி 21 July 2021 5:54 PM GMT (Updated: 2021-07-21T23:25:29+05:30)

லாரி மோதி மின்கம்பம் சேதம்.

கூடலூர்,

மேட்டுப்பாளையத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊட்டி வழியாக நேற்று மதியம் 1 மணிக்கு கூடலூருக்கு லாரி ஒன்று வந்தது. நடுகூடலூரில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள மின்கம்பம் மீது லாரி மோதியது. 

இதில் மின்கம்பம் பலத்த சேதமடைந்து வளைந்தது. மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் நடுகூடலூரில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உதவி பொறியாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து சேதமடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பத்தை நட்டு சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 4 மணிக்கு வழக்கம்போல் மின்வினியோகம் தொடங்கியது.

Next Story