வீட்டு பூட்டை உடைத்து 23½ பவுன் நகை கொள்ளை


வீட்டு பூட்டை உடைத்து 23½  பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 21 July 2021 11:25 PM IST (Updated: 21 July 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே வீட்டு பூட்டை உடைத்து 23½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே மோழியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி. தொழிலாளி. இவரது மனைவி லட்சுமிபிரியா (வயது 29). நேற்று முன்தினம் லட்சுமிபிரியா தனது வீட்டை பூட்டி விட்டு தேசிய ஊரக வேலைஉறுதியளிப்பு  திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்றுவிட்டார்.
 பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த 23½ பவுன் நகையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. 
இது குறித்த தகவலின் பேரில் பெரியதச்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 

ரூ.7 லட்சம்

இதில் லட்சுமிபிரியா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story