கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்


கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 July 2021 5:55 PM GMT (Updated: 2021-07-21T23:26:40+05:30)

கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் குப்புராஜ் ஆகியோர் மேற்பார்வையில் துணை தாசில்தார் சதீஷ், வருவாய் ஆய்வாளர்கள் தேவராஜ், விஜயன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். 

அப்போது கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.5 ஆயிரத்து 100 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story