மாவட்ட செய்திகள்

கோவை போலீசார் மீண்டும் சோதனை + "||" + Test

கோவை போலீசார் மீண்டும் சோதனை

கோவை போலீசார் மீண்டும் சோதனை
ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.
ஆலங்குடி, ஜூலை.22-
ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.
மோசடி புகார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர் செல்வம். இவர் கோவையை சேர்ந்த மருத்துவர் மாதேஸ்வரனிடம் கடன் வாங்கி தருவதாக ரூ.2 கோடியே 85 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் ஏற்கனவே சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சோதனை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பன்னீர்செல்வத்தை கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் ஆலங்குடிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சோதனையிட்டனர்.
 மேலும் சோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு இடங்களுக்கும் போலீசார் பன்னீர் செல்வத்தை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; வெடிபொருட்கள் பறிமுதல்
தெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி உள்ளது.
2. விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை
மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
3. யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை நடத்தலாம்; புதிய விதிமுறைகள் வெளியீடு
யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
4. மும்பையில் தினசரி கொரோனா பரிசோதனையை 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; மாநகராட்சி கமிஷனர் வலியுறுத்தல்
மும்பையில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த வேண்டும் மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியுள்ளார்.
5. காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை
காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.