பருத்தி சாகுபடியை அதிகாரிகள் ஆய்வு
பருத்தி சாகுபடியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வட்டாரம் அச்சுந்தன்வயல் கிராமத்தில் சாகுபடி செய்திருந்த பருத்தி பயிரை ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம்சைலஸ், வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா, ராமநாதபுரம் வட்டார வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன், பயிர் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் இளஞ்செழியன் ஆகியோர் வயல் ஆய்வு மேற்கொண்டனர். பருத்தி பயிரில் தென்பட்ட வேர்வாடல் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலை ஆய்வு செய்தனர். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான உயிரியல் மற்றும் ரசாயன பரிந்துரைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிர் சாகுபடி தொழில்நுட்ப ஆலோசனைகளை தெரிவித்தனர். இந்த வயல் ஆய்வில் அச்சுந்தன்வயல், நொச்சிவயல், முதுனாள் பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வயல் ஆய்விற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் மற்றும் அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் சூர்யா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story