மோட்டார் சைக்கிள் மோதியது; சாலையை கடந்தவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதியது; சாலையை கடந்தவர் சாவு
x
தினத்தந்தி 21 July 2021 11:39 PM IST (Updated: 21 July 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

செட்டிநாடு அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையை கடந்தவர் இறந்தார்.

காரைக்குடி,

காரைக்குடி- திருச்சி பைபாஸ் சாலையில் பூபாண்டிபட்டி அருகே நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் சாலையை கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது காரைக்குடியில் இருந்து கானாடுகாத்தான் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையை கடக்க முயன்றவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செட்டிநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கானாடுகாத்தானை சேர்ந்த அழகு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த நபர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story