திருப்புவனம்,
திருப்புவனம் புதூர் பகுதியில் வைகை ஆற்றிலிருந்து அரசு அனுமதி இல்லாமல் ஆட்டோவில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே ஒரு ஆட்டோ வந்துள்ளது. போலீசாரை பார்த்த உடன் ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 20 மணல் மூட்டை சாக்குகள் இருந்துள்ளது. மணல் மூட்டைகளுடன் ஆட்டோவை பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.