45 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி


45 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 21 July 2021 6:17 PM GMT (Updated: 2021-07-21T23:47:10+05:30)

மானாமதுரை அருகே நடந்த முகாமில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிவகங்கை,

இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம்  மானாமதுரை அடுத்த முத்தனேந்தல் கிராமத்தில் நடந்தது. முகாம் மாற்றுத்திறனாளிகள் சேவை மைய மாநிலத்தலைவர் நாகூர் மீரா தலைமையிலும் நிறுவனர் ராதிகா முன்னிலையிலும் நடைபெற்றது. முகாமில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் நிர்வாகிகள் திருவாசகம், சுதர்சன், அஞ்சலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story