இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
x
தினத்தந்தி 21 July 2021 6:32 PM GMT (Updated: 2021-07-22T00:02:57+05:30)

பராமரிப்பு காரணமாக சிவகங்கை அருகே இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சிவகங்கை,

சிவகங்கை அடுத்த இடையமேலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 1 மணி வரை கூட்டுறவுபட்டி, சிவல்பட்டி, கன்னிமார் பட்டி, ஒக்கப்பட்டி, மேலப்பூங்குடி, தேவன்கோட்டை, மலம்பட்டி, மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் மதகுபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (23-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ராமலிங்கபுரம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம் பட்டி, மேலமங்கலம், காளையார்மங்கலம், ஒக்கூர், பர்மா காலனி, ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.
 அரசனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (23-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, களத்தூர், பில்லூர், மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.Next Story