பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
கரூர்
பக்ரீத் சிறப்பு தொழுகை
இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆடு உள்ளிட்டவற்றை பலியிட்டு அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கினை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கினை ஏழை, எளியோருக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கினை தங்களது தேவைக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி கரூர்-கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளி வாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளாமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்
தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். புத்தாடை அணிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து ஆடு உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை குர்பானியாக ஏழை-எளியோருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் வழங்கிபக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்கள்.
Related Tags :
Next Story