சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 21 July 2021 6:51 PM GMT (Updated: 2021-07-22T00:21:48+05:30)

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் பிரசித்தி பெற்ற மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்பட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 
தோகைமலை ஒன்றியத்தில் மலை மீது அமைந்திருக்கும் விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பிரதோஷத்தையொட்டி பால், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. இதேபோல கழுகூரில் அமைந்திருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.

Next Story