விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 21 July 2021 7:47 PM GMT (Updated: 2021-07-22T01:17:34+05:30)

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

காதல் ஜோடி

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் வனராஜா என்ற இசக்கி (வயது 28). என்ஜினீயரிங் படித்த இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனக்கு சொந்தமான 3 கார்களை வாடகைக்கு விட்டு அங்கேயே பணிபுரிந்து வந்துள்ளார்.
இதே நிறுவனத்தில் பெங்களூர் அருகே வாகளூரை சேர்ந்த முனுசாமி பட்டுப்பூச்சி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இவரது மகள் அனிதா (22). பி.சி.ஏ. படித்துள்ள இவரும், வனராஜாவும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பின்னர் காதலாக மாறியுள்ளது.

திருமணம்

சுமார் 6 மாத காலமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதலுக்கு அனிதா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இருவரும் ஓசூரில் இருந்து புறப்பட்டு சிவந்திபுரத்துக்கு வந்தனர். பின்னர் வனராஜ் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சிவந்திபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அனிதாவின் குடும்பத்தினர் ஓசூரில் இருந்து அனிதாவை தேடி விக்கிரமசிங்கபுரம் வந்தனர். 

போலீசில் தஞ்சம்

இதை அறிந்த காதல் ஜோடி இருவரும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி இருதரப்பினரையும் அழைத்து பேசினார். அப்போது அனிதா தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழ இருப்பதாக கூறி பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என போலீசார் தெரிவித்ததையடுத்து அனிதாவின் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Next Story