நெரிசலில் சிக்கி 60 ஆடுகள் சாவு


நெரிசலில் சிக்கி 60 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 22 July 2021 1:23 AM IST (Updated: 22 July 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நெரிசலில் சிக்கி 60 ஆடுகள் இறந்தன.

நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதமுத்தூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஏராளமான ெசம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று கிடை போடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பாளையங்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் இரவில் மேலப்பாளையம் பஜார் வழியாக அனைத்து ஆடுகளையும் அழைத்து சென்றார்.
அப்போது அந்த வழியாக லாரியை ஓட்டி வந்த டிரைவர், ஆடுகள் ஓரமாக செல்லும் வகையில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பினார். இதனால் ஆடுகள் சாலையை கடப்பதற்காக ஒன்றன் மீது ஒன்று ஏறிச் சென்றன. இதில் நெரிசலில் சிக்கி சுமார் 60 ஆடுகள் இறந்தன. இதனைப் பார்த்த சண்முகம் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த ஆடுகளை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story