பெங்களூருவில் இறைச்சிக்காக கடத்திய 11 ஒட்டகங்கள் மீட்பு


பெங்களூருவில் இறைச்சிக்காக கடத்திய 11 ஒட்டகங்கள் மீட்பு
x
தினத்தந்தி 22 July 2021 2:34 AM IST (Updated: 22 July 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக கடத்தப்பட்ட 11 ஒட்டகங்கள் மீட்கப்பட்டன.

பெங்களூரு: பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் இறைச்சிக்காக ஒட்டகங்கள் கடத்தி செல்லப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு மகாதேவபுராவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது வாகனம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 13 ஒட்டகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 13 ஒட்டகங்களையும் மாநகராட்சியின் கால்நடை துறை அதிகாரிகள் மீட்டனர். அவற்றில் 2 ஒட்டகங்கள் செத்திருந்தது. மற்ற 11 ஒட்டகங்களும் கோசாலையில் விடப்பட்டது. அந்த ஒட்டகங்கள் இறைச்சிக்காக ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுககு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 

இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோல், விஜயாப்புரா மாவட்டத்தில் இறைச்சிக்காக லாரியில் கடத்தி செல்லப்பட்ட 71 மாடுகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீட்டு இருந்தனர். அந்த 71 மாடுகளும் விஜயாப்புராவில் உள்ள கோசாலையில் விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story