கிராவல் மண் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது


கிராவல் மண் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 9:05 PM GMT (Updated: 2021-07-22T02:35:38+05:30)

கிராவல் மண் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்

ஜெயங்கொண்டம்
அரியலூர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் அலுவலர் பாண்டியன் தலைமையிலான குழுவினர் மணல் கடத்தலை தடுக்கும் வண்ணம் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் உள்ள கீழக்குடியிருப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த  லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அதில் அனுமதி எதுவுமின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரியையும், அதன் டிரைவரையும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லாத்தூர் கிராமம் மாங்கொட்டைத் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.


Next Story