சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம்  செய்து காட்டினர்.
x
தினத்தந்தி 21 July 2021 9:15 PM GMT (Updated: 2021-07-22T02:45:13+05:30)

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளத்தில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

சுசீந்திரம்:
மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தங்களை தாங்களே காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தெப்பக்குளத்தில் தீயணைப்பு துறை சார்பில் நடந்தது. குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு உத்தரவின் பேரில் நாகர்கோவில் நிலைய அதிகாரி பெனட் தம்பி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தெப்பக்குளத்தில் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். 
அப்போது தண்ணீர் பாட்டில், தெர்மாகோல் ஆகியவற்றை மிதவைகளாக பயன்படுத்தி தப்பிப்பது எப்படி? என்பதை தத்ரூபமாக நடத்திக் காட்டினர். மேலும் வெள்ளப்பெருக்கு நேரத்தில் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு கயிறு மூலம் பொதுமக்களை மீட்பது எப்படி? என செயல் விளக்கம் அளித்தனர்.

Next Story