மணல் கடத்திய 2 பேர் கைது

ஆற்காடு அருக மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணல் கடத்திய 2 பேர் கைது
Published on

ஆற்காடு

ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பாலாற்று படுக்கையில் மணல் கடத்துவதாக ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்காடு அருகே சக்கரமல்லூர் பாலாற்றில் வேனில் மணல் ஏற்றிக்கொண்டு இருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஆற்காடு பி.டி.ஈஸ்வரன் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 30), ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சஞ்சய் (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com