9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் 65-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ் (சேலம் அழகாபுரம்), சிவகுமார் (கிச்சிப்பாளையம்), ராஜேஸ்வரி (சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்), பிராங்கிளின் அன்றோ வில்சன் (எடப்பாடி), விஸ்வநாதன் (தாரமங்கலம்) ஆகியோர் மத்திய மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன் (செவ்வாய்பேட்டை), செல்லமுத்து (டவுன்) ஆகியோர் தெற்கு மண்டலத்துக்கும், செல்வராஜ் (மல்லூர்), முத்துசாமி (மகுடஞ்சாவடி) ஆகியோர் வடக்கு மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story