வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 July 2021 6:48 AM IST (Updated: 22 July 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.:-

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, 10-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பதிவுதாரர்களுக்கு மாதம் ரூ.200, தேர்ச்சி அடைந்தோருக்கு ரூ.300, பிளஸ்-2, தொழிற் கல்வி, பட்டயப்படிப்பு, தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த பதிவுதாரர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும் வழங்கப்படுகின்றது. மேற்கூறிய உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து பதிவை புதுப்பித்து 5 வருடங்கள் காத்திருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

மேற்கூறியவாறு தகுதியுடைய உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு இணைய தள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employment exchange.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வருகின்ற 31-8-2021-க்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வந்து சமர்ப்பித்து

Next Story