பழவேற்காட்டில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் கைது


பழவேற்காட்டில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 6:52 AM IST (Updated: 22 July 2021 6:52 AM IST)
t-max-icont-min-icon

பழவேற்காட்டில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் கைது 20 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே பழவேற்காடு பூமிக்கோட்டை பகுதியில் வசிப்பவர் ஷாஜகான் (வயது 68). இவர் வீட்டில் கள்ளசாராயம் காய்ச்சுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பாலைவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் மகிதாஅண்ணாகிருஷ்டி தலைமையில் போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் 30 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது. பானைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் ஷாஜகானை திருப்பாலைவனம் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story