பொன்னேரி பேரூராட்சியில் தெருக்களில் மழைநீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கும் சாலைகள்


பொன்னேரி பேரூராட்சியில் தெருக்களில் மழைநீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கும் சாலைகள்
x
தினத்தந்தி 22 July 2021 6:58 AM IST (Updated: 22 July 2021 6:58 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி பேரூராட்சியில் தெருக்களில் மழைநீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கும் சாலைகள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு.

பொன்னேரி,

பொன்னேரி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு பொன்னேரி பேரூராட்சி சார்பில் குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வரும் நிலையில், சாலையில் நடுவே பள்ளங்கள் ஏற்பட்டு மண் சாலைகளாக மாறி உள்ளது.

தற்போது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் கூறிய புகாரின் அடிப்படையில், பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசுடன் திருவாப்பாடி கிராமத்தில் உள்ள லட்சுமியம்மன் கோவில் தெரு மற்றும் என்.ஜி.ஓ.நகரில் சேரும் சகதியுமாக கிடக்கும் சாலைகளையும் பார்வையிட்டார்.

மேலும், பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் இடிந்துவிழுந்த பழமையான மதில் சுவரையும், திருக்குளத்தில் சாக்கடை நீர் கலந்து இருப்பதையும் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

Next Story