எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது - ஒ.பன்னீர்செல்வம் பேட்டி


எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது - ஒ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 22 July 2021 10:03 AM GMT (Updated: 2021-07-22T15:41:24+05:30)

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

சென்னை,

முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருவதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் பேசியதாவது,

எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அரசியல் ரீதியாக சந்திக்க முடியாமல் திமுக இருக்கிறது.

திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்தார்.

 தொடர்ந்து  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், 
ஜெயலலிதா பல்கலை. இயங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்க முயற்சிக்கின்றனர் என்றார்.

Next Story