கல்வி கட்டணம் வசூலிப்பு
கல்வி கட்டணம் வசூலிப்பு
திருப்பூர்
வீரபாண்டி அனைத்து கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலெக்டர் வினீத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களின் பெற்றோர் மிகவும் ஏழ்மையானவர்கள். தற்போது இந்த பள்ளியில் பிளஸ்1 மாணவர்கள் புதிய சேர்க்கைக்கு தமிழ்வழி கல்வியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு ரூ.1800ம், ஆங்கில வழி பயிலக்கூடிய மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 300ம் தமிழக அரசின் வழிகாட்டும் நெறிமுறைக்கு மாறாக கட்டாய கட்டணம் வசூலிக்க கூடிய நிலை உள்ளது.
ஏற்கனவே பள்ளியில் இடைநிறுத்தலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த கட்டண வசூல் மாணவர்களை படிக்க முடியாமல் செய்துவிடும். எனவே கட்டாய கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். பெற்றோர், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story