தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.
Published on

தூத்துக்குடி, ஜூலை.23-

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நிமோனியா

குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா என்ற கடுமையான சுவாசநோயை தடுக்கும் வகையில் நியூமோகாக்கஸ் தடுப்பு மருந்து உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.தற்பொழுது குழந்தைகளுக்கு முதல் தவணையாக 6-வது வாரமும், 2-வது தவணையாக 14-வது வாரமும், ஊக்குவிப்பு தவணையாக 9-வது மாதத்திலும் வழங்க உலகளவில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 13-ந் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் தடுப்பூசி போடும் பணி சென்னையில் தொடங்கப்பட்டது.

இன்று தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கப்படுகிறது. மாதந்தோறும் 1,800 குழந்தைகள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் துணை சுகாதார நிலையங்களிலும் மற்றும் களப்பணியில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மூலம் அங்கன்வாடி மையத்தில் வைத்து தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை பெற்று நலமோடு வாழ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com