பெருங்குடி ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் ஊராட்சி தலைவர் தகவல்


பெருங்குடி ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் ஊராட்சி தலைவர் தகவல்
x
தினத்தந்தி 22 July 2021 11:46 AM GMT (Updated: 22 July 2021 11:46 AM GMT)

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 350 மீட்டர் தூரத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

விளமல், 

திருவாரூர் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சி சார்பில் பெருங்குடி வடக்குத்தெரு, கீழ படுகை, மில் தெரு, அனக்குடி சுடுகாடு ஆகிய பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 350 மீட்டர் தூரத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பழுது நீக்கம், விரிவாக்கம் ஆகியவை நடைபெற்றுள்ளது. பெருங்குடி ஊராட்சியில் 80 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் இலவசமாக ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. 35 பயனாளிகளுக்கும் இலவசமாக கோழி வழங்கப்பட்டுள்ளது. 7 பயனாளிகளுக்கு ஆடு, மாடு பாதுகாப்பு கொட்டகை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பெருங்குடி கிராமத்தில் 3 இடத்தில் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மேரி சுகுணாவதி பிரபு தெரிவித்துள்ளார்.

Next Story