களப்பால் கிராமத்தில் திறக்கப்படாமல் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?
களப்பால் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே களப்பால் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய கட்டிடத்தில் போதுமான அளவு வசதி இல்லாத காரணத்தால் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்தன. பணிகள் முடிந்து 6 மாதம் ஆகியும் புதிய கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இந்த கட்டிடத்தை திறந்தால் திருக்களர், கரம்பக்குடி, பன்னியூர், அக்கரை கோட்டகம், வாட்டர், வெங்கத்தான்குடி, களப்பால், குலமாணிக்கம், அப்பியன் திருவாசல், சீலத்தநல்லூர், மீனம்பநல்லூர், நல்லநாயகிபுரம், சோலைக்குளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன் அடைவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறக்கப்படாமல் உள்ள புதிய கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மேலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றக்கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story