தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு


தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 22 July 2021 12:57 PM GMT (Updated: 22 July 2021 12:57 PM GMT)

போடிமெட்டு மலைப்பாதையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

போடி:

தேனி மாவட்டத்தில் புயல் மற்றும் பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

அதன்படி லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் போடிமெட்டு மலைப்பாதையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

 பேரிடர் மீட்பு படை அதிகாரி கணேஷ் பிரசாத் தலைமையில், போடி தாசில்தார் செந்தில் முருகன், போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் முத்துராம் மற்றும் பல்வேறு துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

மழைக்காலத்தில் மலைப்பாதையில் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழும் இடங்கள் மற்றும் புயலின்போது மரங்கள் முறிந்து விழும் இடங்கள் குறித்த விவரங்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சேகரித்தனர். 

தேனியில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

Next Story