மாடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம்


மாடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 22 July 2021 1:36 PM GMT (Updated: 22 July 2021 1:36 PM GMT)

கம்பம் அருகே மாடுகளுக்கான மலடு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.

கம்பம்:

கம்பம் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் மாடுகளுக்கான மலடு நீக்க சிகிச்சை சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மண்டல இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் முருகலட்சுமி முன்னிலை வகித்தார். 

முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்குதல், மடி நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதில் புதுப்பட்டி கால்நடை மருந்தக மருத்துவர் காமேஷ் கண்ணன் கலந்து கொண்டு கன்று வளர்ப்பு மேலாண்மை குறித்தும், மலடு நீக்க சிகிச்சை மற்றும் குடற்புழு நீக்கம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

Next Story