பெண் பலி
திருப்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் திடீரென்று பழுதாகி கதவு திறந்ததால் தவறி விழுந்து பெண் பலியானார்.இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் திடீரென்று பழுதாகி கதவு திறந்ததால் தவறி விழுந்து பெண் பலியானார்.இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பெண் பலி
திருப்பூர் ஆஷர்மில் லேபர் காலனியை சேர்ந்தவர் வாசு. இவருடைய மனைவி குமாரி வயது 55. இவர் அதே பகுதியில் பிரைம் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 4வது தளத்தில் உள்ள 3 வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு சென்ற குமாரி, அடுக்குமாடி குடியிருப்பின் 4வது தளத்தில் இருந்து கீழே வருவதற்காக அங்குள்ள ‘லிப்ட்’டை மின்தூக்கியை பயன்படுத்தி உள்ளார். அப்போது 3வது தளத்திற்கு செல்வதற்குள் லிப்ட்டில் திடீரென பழுது ஏற்பட்டு பாதியில் நின்றது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த குமாரிலிப்ட்டில் இருந்த அலாரம் பட்டனை அழுத்தி உள்ளார். அப்போது லிப்ட்டின் கதவு தானாக திறந்தது. அப்போது பதற்றத்தில் இருந்த குமாரி வெளியே செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் திறந்த கதவு வழியாக வெளியே வர முயன்றுள்ளார். ஆனால் லிப்ட் குறிப்பிட்ட தளத்தை வந்தடையாமல் அந்தரத்தில் நின்றதால்,லிப்ட் வாசல் வழியாக குமாரி தவறி தரைதளத்தில் வந்து முகங்குப்புற கீழே விழுந்தார். இதில் அவர் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் லிப்ட்டின் அலாரம் சத்தம் கேட்டு ஊழியர்கள் அங்கு சென்றபோது குமாரி இறந்து கிடந்தார்.
2 பேர் கைது
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளர் துரைசாமி71லிப்ட் ஸ்டெப்லேசர் சூப்பர்வைசர் மேகநாதன்27 ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள லிப்ட் பராமரிப்பாளர் கஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story