போலீஸ் நிலையங்களில் சானிட்டரி நாப்கின் எந்திரம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் சானிட்டரி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 6 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்பட மொத்தம் 41 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களிலும் பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பெண் போலீசார், பணி நேரத்தில் பல்வேறு அசவுகரியங்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே பெண் போலீசார் பயன்பெறும் வகையில் போலீஸ் நிலையங்களில் சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, முதல்கட்டமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானம், போலீஸ் நிலையங்கள் என மொத்தம் 27 இடங்களில் சானிட்டரி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டது.
இதில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட எந்திரத்தின் பயன்பாட்டை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தொடங்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story