முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 22 July 2021 6:29 PM GMT (Updated: 2021-07-22T23:59:38+05:30)

கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

திருப்புவனம்
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இங்கு ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனுடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகையில் நேற்று தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணி செய்தனர். அப்போது ஒரு முதுமக்கள் தாழி தென்பட்டது. இந்த முதுமக்கள் தாழி சேதாரமில்லாமல் முழு உருவத்தில் கிடைத்துள்ளது. மேலும் இதன் அருகே அழகிய சுடுமண் குடம் தென்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது இன்னும் பல பொருட்கள் கிடைக்கக்கூடும் என்றும் தெரிய வருகிறது.

Next Story