அண்ணன் அடித்துக்கொலை; வாலிபர் கைது
கல்லல் அருகே அண்ணனை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கல்லல்
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அறிகுறிஞ்சி ஊரைச் சேர்ந்தவர் புவனேந்திரன்(வயது 38). இவருடைய தம்பி மதியழகன்(35). மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை வீட்டில் தனியாக சத்தமாக பேசியுள்ளார். இதனை அண்ணன் புவனேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மதியழகன் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து புவனேந்திரன் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த புவனேந்திரனை தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் புவனேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புவனேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட புவனேந்திரனுக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Related Tags :
Next Story