ஓட்டலில் புகுந்து திருட்டு


ஓட்டலில் புகுந்து திருட்டு
x
தினத்தந்தி 22 July 2021 6:37 PM GMT (Updated: 2021-07-23T00:07:43+05:30)

ஓட்டலில் புகுந்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜபாளையம், ஜூலை
ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் பின் புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அய்யனார் அளித்த தகவலின் பேரில் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், கல்லா பெட்டியில் இருந்த ரொக்க பணம், பீடி மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடையின் பாதுகாப்பிற்காக கடையை சுற்றிலும் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அதன் கட்டுப்பாட்டு பெட்டியை கடையின் உள் பகுதியில் அமைத்திருந்தார்.

Next Story