நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவ சிறப்பு பூஜை
நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவ சிறப்பு பூஜை நடைபெற்றது.
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பவித்ர உற்சவம்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
அந்த திருவிழாக்களில் நடக்கும் பூஜை நிகழ்வுகளில் தெரியாமல் நடந்த தவறுகள் மற்றும் குறைபாடுகள் நடந்திருந்தால் அதனை இறைவனிடம் வேண்டி நிவர்த்தி செய்து, அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வை பவித்ர உற்சவமாக கொண்டாடுவது வழக்கம்.
சிறப்பு பூஜை
அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நெல்லையப்பர் கோவிலில் நேற்று நடைபெற்றது. கோவிலில் கும்பம் வைத்து ஹோமம் வளர்த்து பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு பல்வேறு அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமி-அம்பாளுக்கு பருத்தி நூல் ஆடைகள் அணிவிக்கப்பட்டு பருத்தி நூல் கொண்டு தயாரிக்கப்பட்டு பவித்ர மாலைகள் யாகபூஜைகளில் வைத்து சிறப்பு பூஜை செய்து, சுவாமி -அம்பாள் மற்றும் உற்சவர் பஞ்சமூர்த்திகளுக்கும் அணிவிக்கப்பட்டது. பின்னர் மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story