மாவட்ட செய்திகள்

கட்டிட தொழிலாளி தற்கொலை + "||" + Construction worker commits suicide

கட்டிட தொழிலாளி தற்கொலை

கட்டிட தொழிலாளி தற்கொலை
பேட்டையில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி மேலதிருவேங்கடநாதபுரம் புதுக்காலனியை சேர்ந்தவர் நடராஜன் மகன் குமார் (வயது 37). கட்டிட தொழிலாளியான இவருக்கு பெருமாள்தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் இவரை மனைவி தட்டிக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த குமார் விஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. முதியவர் விஷம் குடித்து தற்கொலை
சுரண்டையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. விவசாயி தற்கொலை
கடையநல்லூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நெல்லையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
கோத்தகிரி அருகே பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி வர மறுத்ததால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.