டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டீசல், பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய- மாநில அரசுகளை கேட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மாரிச்செல்வம், துணை செயலாளர் குமார், பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com