குமரி வாலிபரை கரம்பிடித்த காஞ்சீபுரம் இளம்பெண்


குமரி வாலிபரை கரம்பிடித்த காஞ்சீபுரம் இளம்பெண்
x
தினத்தந்தி 23 July 2021 2:23 AM IST (Updated: 23 July 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து, குமரி வாலிபரை காஞ்சீபுரம் இளம்பெண் கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

கருங்கல்:
இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து, குமரி வாலிபரை காஞ்சீபுரம் இளம்பெண் கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. 
இளம்பெண் மாயம்
காஞ்சீபுரம் மாவட்டம் சிறு காவேரிபாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகள் காயத்ரி (வயது 18). இவர் கடந்த 19-ந்் தேதி வீட்டில் இருந்து காணாமல் போனார். இதுகுறித்து மணிகண்டன் பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் உதவியுடன் தேடி வந்தனர். இந்த நிலையில் காயத்ரியின் செல்போன் சிக்னல் மூலம் அவர் குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. 
இதனைதொடர்ந்து பாலுசெட்டி சத்திரம் போலீசார், நேற்று கருங்கலுக்கு விரைந்தனர். பின்னர் கருங்கல் போலீஸ் உதவியுடன் சுண்டவிளை பகுதிக்கு சென்றனர். அங்கு காயத்ரி தனது காதலனுடன் இருப்பதை கண்டனர். பின்னர் காயத்ரி மற்றும் அவரது காதலனை போலீசார், கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்
விசாரணையில், காயத்ரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கருங்கல் மேலசுண்டவிளையை சேர்ந்த விஜின்(23) என்பவர் அறிமுகமானார். பின்னர் இவர்கள் நட்புடன் பழகி வந்தநிலையில், காதல் மலர்ந்தது. மேலும் காயத்ரி தனது காதலன் விஜினை விழுப்புரம் வரவழைத்து அவருடன் கருங்கலுக்கு ஓடி வந்தது தெரிய வந்தது.
இருப்பினும் காயத்ரி காணாமல் போன வழக்கு பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் போலீசார், காயத்ரி மற்றும் அவரது காதலன் விஜின் ஆகிேயாரை விசாரணைக்காக காஞ்சீபுரம் அழைத்து சென்று உள்ளனர்.

Next Story