கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவை சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ராஜாநகர் கிருஷ்ணா காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கிடமான நிலையில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் ராமநாதபுரம் அங்கண்ணன் லே-அவுட்டை சேர்ந்த சந்தோஷ் (வயது 30) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சா, ரூ.2 ஆயிரம் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல காரமடை பகுதியில் கஞ்சா விற்றதாக தாயனூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (57) என்பவரை காரமடை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story