மாவட்ட செய்திகள்

கோவையில் கொரோனாவுக்கு 6 பேர் பலி + "||" + 6 killed in Coimbatore corona

கோவையில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

கோவையில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
கோவையில் கொரோனாவுக்கு 6 பேர் பலியானார்கள்.
கோவை

கோவையில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சுகாதார துறை நேற்று வெளியிட்ட பட்டியல்படி கோவையில் புதிதாக 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 648 ஆக அதிகரித்து உள்ளது. 

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 60 வயது ஆண், 72 வயது முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண், 60 வயது ஆண், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 68 வயது ஆண், 67 வயது ஆண் என 6 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

இவர்களுடன் சேர்த்து இதுவரை 2,388 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனா தொற்றுக்கு பலியாகினர். கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 312 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 2,388 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.