மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ் + "||" + Provisional certificate of Plus-2 score

மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ்

மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழ்
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தனர்.
அரியலூர்:
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு, கடந்த 19-ந்தேதி அரசின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகள் மூலம் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை நேற்று முதல் அரசின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 11 மணி முதல் அரசின் இணையதள முகவரியில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நகர்ப்பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய விவரத்தை பதிவு செய்து பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொண்டு, நகல் எடுத்து கொண்டனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு சரியான இணையதள வசதியும், நகல் எடுக்கும் வசதியும் இல்லாததால், அவர்கள் பயின்ற பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மூலம் தங்களது பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிளஸ்-2 மதிப்பெண் தற்காலிக சான்றிதழை, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் வரை உயர்கல்வி சேருவதற்கு மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கழை கூத்து கலைஞர்களுக்கு சாதி சான்றிதழ்
20 ஆண்டுகளுக்கு பிறகு கழை கூத்து கலைஞர்களுக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
2. வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ்
காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
3. வெற்றி சான்றிதழ்
அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரி வெற்றி சான்றிதழ் வழங்கினார்.