7 ஆடுகள் திருட்டு


7 ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 22 July 2021 9:54 PM GMT (Updated: 2021-07-23T03:24:11+05:30)

7 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரையை சேர்ந்தவர் அஸ்மாகனி (வயது 48). இவர் வீட்டின் அருகில் பட்டி அமைந்து ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பட்டியில் இருந்து 7 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அஸ்மாகனி கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்மா கனியின் ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story