வாகனங்களுக்கு வாடகையை வழங்க வேண்டும்
வாகனங்களுக்கு வாடகையை வழங்க வேண்டும்.
திருப்பூர்,
தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலெக்டர் வினீத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கடந்த சட்டமன்ற தேர்தல் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 350க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது. தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும், அந்த வாகனங்களுக்கு உண்டான வாடகை தொகை இன்னும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து தாலுகா அலுவலகத்திலும், தேர்தல் பிரிவிலும் கோரிக்கை விடுத்தும் வாடகை கிடைக்கவில்லை.
கொரோனா பாதிப்பினால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். வாகன பராமரிப்பு மற்றும் குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறோம். எனவே தேர்தல் பணிக்கு இயங்கிய ஒப்பந்த வாகனங்களுக்கு வாடகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story