நடைபாதையில் உலா வந்த சிறுத்தைப்புலி


நடைபாதையில் உலா வந்த சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 22 July 2021 10:31 PM GMT (Updated: 2021-07-23T04:02:46+05:30)

நடைபாதையில் உலா வந்த சிறுத்தைப்புலி.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள கம்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றி தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று மதியம் அங்குள்ள தனியார் பங்களாவுக்கு செல்லும் நடைபாதையில் சிறுத்தைப்புலி ஒன்று உலா வந்தது. 

இதை கண்ட சிலர் தங்களது செல்போனில் சிறுத்தைப்புலியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். 

Next Story