கட்டிட வேலைக்கு செல்ல காவிரில் ஆற்றில் மாயமான தொழிலாளி பிணமாக மீட்பு


கட்டிட வேலைக்கு செல்ல காவிரில் ஆற்றில் மாயமான தொழிலாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 23 July 2021 4:08 AM IST (Updated: 23 July 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட வேலைக்கு செல்ல காவிரி ஆற்றில் நீந்தி மாயமான தொழிலாளி பொத்தனூரில் பிணமாக மீட்கப்பட்டார்.

பரமத்திவேலூர்,

ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மகன் பாலசுப்பிரமணி (வயது 37). இவரும், ஜேடர்பாளையத்தை‌ சேர்ந்த ரங்கசாமி மகன் கவின்குமாரும் (28) ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பகுதிக்கு கட்டிட வேலைக்கு காவிரி ஆற்றை நீந்தி கடந்து சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக 2 பேரும் வழக்கம்போல் காவிரி ஆற்றை நீந்தி கடக்க முயன்றனர். 
இதில் பாலசுப்ரமணியம் நீந்தி எதிர் கரையான ஊஞ்சலூர் பகுதிக்கு சென்றார். ஆனால் பின்னால் வந்து கொண்டிருந்த கவின்குமார் திடீர் மாயமானார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணி உடனடியாக ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் மாயமான கவின்குமாரை கடந்த 2 தினங்களாக தேடி வந்தனர். 
விசாரணை
இந்த நிலையில் நேற்று பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர்‌ காவிரியாற்றில் வாலிபர் ஒருவரின் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு  பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில் கரை ஒதுங்கியது கட்டிட தொழிலாளியான கவின்குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story