திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 23 July 2021 6:27 AM IST (Updated: 23 July 2021 6:27 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூங்கா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 57). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல வேலைக்கு சென்றார். இரவு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த கம்மல், மூக்குத்தி என 2 பவுன் தங்க நகைகளும், ½ கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து நாராயணன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story