திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். அவரை பா.ஜ.க. வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச்சென்றனர். வடிவுடையம்மன், தட்சிணாமூர்த்தி, பட்டினத்தார் சன்னதிகளுக்கு சென்று அவர் வழிபட்டார்.
பின்னர் நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது இதனால் நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. 3-வது அலை எப்போது வேண்டுமானால் வரலாம் என்று உலக சுகாதார மையம் சொல்லி உள்ளது. அதனால் நாம் எச்சரிக்கை உணர்வோடு இருக்கவேண்டும். புதுவையில் 55 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற வேண்டும் என்ற எண்ணத்தோடு நாங்கள் பணியாற்றி வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் பள்ளியில் பணியாற்றும அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற சூழ்நிலை வந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story