மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போனை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு
Published on

திரு.வி.க. நகர்,

சென்னை திருமங்கலம், வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு ஆபிரகாம். இவர், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் பார் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென அன்பு ஆபிரகாம் கையில் இருந்த செல்போனை பறித்துச்சென்று விட்டனர்.

இதுகுறித்து அண்ணாநகர் மேற்கு பணிமனை மேலாளர் அன்பரசன் மூலம் திருமங்கலம் போலீசில் அன்பு ஆபிரகாம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com