ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டிப்பு


ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 6:51 PM IST (Updated: 23 July 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர்  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.

தொடர்ந்து சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்தநிலையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நாளையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் மேலும் 6 மாத காலம் அவகாசம் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

Next Story