ஏலகிரிமலையில் சுற்றுலா சென்ற கார் தீப்பற்றி எரிந்தது


ஏலகிரிமலையில் சுற்றுலா சென்ற கார் தீப்பற்றி எரிந்தது
x
தினத்தந்தி 23 July 2021 7:29 PM IST (Updated: 23 July 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலையில் சுற்றுலா சென்றகார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதில் சென்ற 7 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.

ஜோலார்பேட்டை,

காரில் திடீர் தீ

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் வாணியம்பாடி, சலாமாபாத் பகுதியை சேர்ந்த நயீம் அகமது (வயது 41) என்பவர் தனது அம்மா, மனைவி, பிள்ளைகள் உள்பட 7 பேர் நேற்று மாலை 4 மணி அளவில் ஏலகிரி மலையை சுற்றி பார்க்க காரில் சென்றனர். 

ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்றபோது என்ஜின் பகுதியில் இருந்து குபுகுபுவென புகை வெளியானது. இதை கண்டதும் நயீம் அகமது காரை நிறுத்திவிட்டார். காரில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியேறினர்.  இந்தநேரத்தில் என்ஜின் பகுதியில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. 

உயிர்த்தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏலகிரிமலை போலீசார் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் கார் கொழுந்துவிட்டு எரிந்தது. திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முழுவதுமாக எரிந்து விட்டது. உடனடியாக அனைவரும் வெளியே வந்ததால் உயிர்த்தப்பினர்.

இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் முழுவதுமாக எரிந்த காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சரியானது. திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஏலகிரி மலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story